மதுரை நகர் மற்றும் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா(gutka) மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நகரில் புகையிலை, கஞ்சா விற்பனை செய்வதை தடுப்பதற்கு தனிப்படை அமைத்து முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் அதோடு புகையிலை பொருட்கள் குட்கா விற்பனை செய்யும் கடைகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை, மதிச்சியம் ராமராயர் மண்டபம் பகுதியில் தொடர்ந்து கணேஷ் புகையிலை மற்றும் குட்கா விற்பனை நடந்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அதிசியம் காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் தலைமையில் போலீசார் திடிரென ரஞ்சித் ஸ்டோர்ஸ் இன்னும் சிறிய மளிகை கடையை சோதனையிட்டதில் அங்கு கணேஷ் புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த கடையின் உரிமையாளர் மகாதேவனை விசாரணை செய்த போலீசார் உடனடியாக அந்த கடைக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வரவழைத சீல் வைத்தனர். அதோடு அந்தப் பகுதியில் உள்ள சிறிய சிறிய மளிகை கடைகளுக்கும் போலீசார் நேரில் சென்று குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் எடுத்தனர்.
கடை உரிமையாளர் மகதேவன் மீது ஏற்கனவே மதிச்சியம் காவல் நிலையத்தில் இதுவரை 20 குட்கா வழக்குகள் உள்ளது குறிப்பிடத் தக்கது.