தன்னை பாக்ஸிங்கிற்கு அளித்தவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக “பாக்ஸிங்கிற்கு நான் தயார் என்றும், இடம் மற்றும் நேரத்தை அறிவித்தால் உடனே வருகிறேன்” என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்த நிலையில், திடீரென சீமானை எதிர்த்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவருக்கு இங்கு பவர் அதிகமாக உள்ளது எனக்கூறி தனது புகாரை நள்ளிரவில் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று வாபஸ் வாங்கிவிட்டு பெங்களூரு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அதையடுத்து நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் அடுத்த திருப்பமாக சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த நிலையில் வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை வம்பிழுக்கும் விதமாக பேசிய ஒரு ஆடியோ சமூக வலைதளதங்களில் பரவி வருகிறது. இந்த ஆடியோ தொடர்பாக வீரலட்சுமி தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
வீரலட்சுமியின் கணவர் கணேசன், தன்னை பாக்ஸிங்கிற்கு அழைத்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்..
“பாக்ஸிங்கிற்கு நான் தயார் என்றும், இடம் மற்றும் நேரத்தை அறிவித்தால் உடனே வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அவர் என் கையால் தான் சாவது என முடிவெடுத்தால் நான் அவரை எதிர்கொள்கிறேன்” என்றும் சீமான் தெரிவித்தார்.