Sathyabratha Sahoo Letter : மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வருகிற 19-ந்தேதி மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : MI-ஐ விட்டு வெளியேற முடிவெடுத்த ரோகித்.. ஹர்திக் -க்கு இறுதி எச்சரிக்கை!
இந்த வாக்குச்சாவடிகளில் எல்லாம் அடிப்படை வசதிகளை செய்து தரும்படி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் Sathyabratha Sahoo Letter கூறப்பட்டு இருப்பதாவது..
மக்களவை தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
இதையும் படிங்க : April 5 Gold Rate : குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
வாக்குச்சாவடிகளில் 15க்கு15 அடி அளவில் பந்தல் போடப்பட்டு, அதில் வாக்காளர்கள் காத்திருக்க இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும்.
வாக்குச்சாவடிகளில் உதவி மையம், குடிநீர், கழிவறை, சாய்வு தளம், மின் இணைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை செய்து தர வேண்டும்.
குழந்தைகளுடன் வரும் வாக்காளர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கான வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.