1 மற்றும் 2ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களிடையே கற்றலில் மேம்பாட்டைக் கொண்டுவரவும், இடையில் ஏற்பட்ட விரிசலைச் சீராக்கவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது
அந்த வகையில் இல்லம் தேடி கல்வி உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 1 மற்றும் 2ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.
1 மற்றும் 2ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால் அந்த நடைமுறை செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்யாமல் இருந்தது.
இந்த நிலையில் இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் 1 மற்றும் 2ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.
வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதைப் பறக்கும்படை ஆய்வு செய்து உறுதி செய்யும் எனவும், இது குறித்த அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.
மேலும் ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது