முதலமைச்சரின் 70வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி புதுமையான வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்த நாளை மார்ச் 1 தேதி தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களையும் கல்வித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
அதில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணங்கள், குழந்தைகளுக்குத் தொலைநோக்கு கல்வித் திட்டங்கள் , தனியார் நிறுவனங்கள் மூலம் உலகிற்கு வணிகம் சார்பான முயற்சிகள் உள்ளிட்டவையும் அதில் அடங்கும்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை விதவிதமாக கொண்டாடவும் திமுக அரசின் திட்டங்களை அவர் பிறந்த நாள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் திமுக தொழில்நுட்ப நுட்ப அணி புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
இதற்கான இரண்டு திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்து சொல்லச் சிறப்பு என்னை திமுக தகவல் தொழில்நுட்ப அணியால் அறிவிக்கப்பட்டுள்ளது.
07127191333 இந்த எண்ணிற்கு அழைத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கலாம். இந்த எண் இன்று முதல் மார்ச் 2ம் தேதி வரை செயல்படும்.
இதற்கு அடுத்தபடியாக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் தம்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் மற்றும் ஒரு புதிய ஏற்பாடு செயல்படுத்தப்பட்டுள்ளது.
Www.selfiwithcm.com என்று இணையத்திற்குள் சென்று க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் அதில் மெய் நிகர் என்ற விசுவல் தொழில்நுட்பம் மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்.
இந்த செல்ஃபி வித் cm பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் என்று திமுகவினர் தெரிவிக்கின்றன. மேலும் இந்த இரண்டு செயலி மூலம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் என்று லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது