காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமாகி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Also Read : மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக புதிய திட்டம் – வெளியான டக்கர் தகவல்..!!
இதையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு நுரையீரல் சாா்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்ட்டு, அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .
இந்நிலையில், திடீரென அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வந்தனர் இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது 75 ஆவது வயதில் காலமாகி உள்ள நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.