அமைச்சர் செந்தில் பாலாஜியின்(senthil balaji )கைது செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி (senthil balaji)சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறி,அவருடைய மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிமன்ற நீதிபதி அமைச்சர் செந்தில் பாலாஜியை(senthil balaji) அமலாக்கத்துறை கைதுசெய்த நடவடிக்கை சட்டபூர்வமானது என்றும், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தீர்ப்பளித்து.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரின் மனைவி மேகலாவும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.