செந்தில் பாலாஜிக்கு(senthilbalaji) ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு எதிராக 120க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை டிரங்கு பெட்டியில் அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்த நிலையில்,உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில்,புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு இன்று மாலை 5.20 மணி அளவில் அழைத்து வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.