கடலூரில் (cuddalore), குடும்பத்தோடு, 2 பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் வீட்டில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் (cuddalore) செல்லாங்குப்பம் பகுதியில் பிரகாஷ் – தமிழரசி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 8 வயதில் ஹாசினி என்ற குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் இவர்களுடன் தமிழரசியின் அக்காவான தனலட்சுமி என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக அவரது கணவரை விட்டு தங்கை வீட்டிற்கு 4 குழந்தையுடன் வந்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில், தனலட்சுமியின் கணவர் சர்குரு தனது மனைவியை சந்தித்து சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் தான் கொண்டு வந்த பெட்ரோலை தனலட்சுமி மற்றும் அவரது 4 மாத குழந்தை மீதும் ஊற்றியுள்ளார்.
மேலும், இதனை தடுக்கச் சென்ற தனலட்சுமியின் தங்கை தமிழரசி மற்றும் அவரது 8 மாத பெண் குழந்தை ஹாசினியின் மீதும் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார்.
பின்னர், சர்குருவும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் 2 பச்சிளம் பெண் குழந்தை உட்பட 4 பேரும் தீயில் எரிந்து உயிரிழந்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தனலட்சுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குடும்பத்துடன் தீயில் கருகிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.