Soodhu Kavvum 2 : கடந்த 2013-ல் வெளியான சூது கவ்வும் திரைப்படம் முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றது.
கதை, திரைக்கதை, காட்சிகள், வசனம் என்று அனைத்திலும் சுவாரசியத்தை சேர்த்திருந்தார் நலன் குமாரசாமி.
அதுமட்டுல்லாமல் தமிழின் சிறந்த ப்ளாக் க்யூமர் திரைப்படங்களில் ஒன்றாக இன்றளவும் சூது கவ்வும் திரைப்படம் கருதப்படுகிறது.
சூது கவ்வும் முதல் பாகத்தை சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்து இருந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜுடன் இணைந்து சி.வி.குமார் தயாரித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திரஜா- கார்த்திக் திருமணக் கூத்து.. கலாச்சார சீரழிவு! கொதிக்கும் ரசிகர்கள்!!
சூது கவ்வும் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, ரமேஷ் திலக், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது வெளியாக உள்ள சூது கவ்வும் 2ஆம் (Soodhu Kavvum 2) பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த நிறைய பேர் இல்லை.
மேலும், 2ஆம் பாகத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் மிர்ச்சி சிவா நடித்துள்ளார். கருணாகரனுக்கும் முக்கிய வேடம் தரப்பட்டுள்ளது.
இவர் தவிர ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோரும் சூது கவ்வும் 2வில் நடித்துள்ளனர். சூது கவ்வும் 2 படத்தை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார்.
படத்தில் இசை எட்வின் லூயிஸ் விஸ்வநாத் அமைத்துள்ளார். முதல் பாகத்தில் இசையும், பாடல்களும் எத்தனை முக்கியமாக அமைந்து இருந்ததோ, அதேபோல் இரண்டாம் பாகத்திலும் இசைக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளனர் படக்குழுவினர்.
அதேபோல் படத்தில் காமெடிக் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. சூது கவ்வும் 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் சில தினங்கள் முன்பு நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து வெளியான வீடியோவில், படம் கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என சி.வி.குமார் தெரிவித்திருந்தார்.
சூது கவ்வும் படத்தின் வெற்றிக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பிரதான காரணமாக இருந்தனர் என்பதனால், படத்தின் இரண்டாம் பாகத்தின் புரமோஷனை மாணவர்களிடமிருந்து தொடங்கியுள்ளார் சி.வி.குமார்.
அதன்படி, ராஜலட்சுமி இன்ஜினியரிங் காலேஜில் சுமார் 10000 மாணவர்கள் முன்னிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டனர்.
இந்நிகழ்வில் மிர்ச்சி சிவா உள்பட படத்தில் நடித்தவர்கள், தொழில் நுட்பக்குழு என அனைவரும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் “Behind woods”