வானியல் நடக்கும் அறிய நிகழ்வு தான் கிரகணம் . இது அறிவியல் மற்றும் ஜோதிடம் ரீதியில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. என்ன தான் இவை அறிய நிகழ்வுகளாக இருந்தாலும், அசுபமாகவே பார்க்கப்படுகிறது.
சந்திர கிரகணம் 2023 எப்போது?
சித்ரா பூர்ணிமா மற்றும் புத்த பூர்ணிமாவுடன் இணைந்த மே 5 வெள்ளிக்கிழமை இரவு இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நிகழும்.
இந்த சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8.44 மணிக்கு தொடங்குகிறது.இந்த கிரகணத்தின் உச்சம் இரவு 10.52 மணிக்கு இருக்கும். நள்ளிரவு 1.01 மணிக்கு கிரகணம் நிறைவடையும்.கர்ப்பிணிப் பெண்களுக்கு கிரகணம் அசுபமானது அல்ல. ஆனால் சில விஷயங்கள் எதிர்மறை சக்திகளால் ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே அவர்கள் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் சந்திர கிரகணத்தைப் பார்க்கக் கூடாது.இந்த சந்திர கிரகணத்தின் போது, சந்திரனை நிழல் கிரகமான கேது என்ற பாம்பு கிரகம் விழுங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் ஒளிரும் சந்திரனின் தன்மை தூய்மையற்றதாகிறது. ஒளி மங்குகிறது.இது சந்திர கிரகணம் என்பதால் வெறும் கண்களால் பார்க்கலாம். ஆனால் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது.
கர்ப்பிணி பெண்கள் இதை தவிர்க்க வேண்டுமா?
சந்திரன் மனோ காரகா என்று அழைக்கப்படுகிறார். சந்திரகிரகணத்தின் போது கருவுற்றிருக்கும் பெண்கள் கத்தரிக்கோல், கத்தி, ஊசி போன்ற கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும், இது மனச் சங்கடத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.
சந்திர கிரகணத்தின் போது சாப்பிடலாமா?
சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் சாப்பிடுவதையும் சமைப்பதையும் தவிர்க்க வேண்டும். கிரகணத்தின் தூய்மையற்ற கதிர்களால் உணவு மாசுபடுவதாக நம்பப்படுகிறது, எனவே கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் போது சமைப்பதையும் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
கிரகணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிடுவது நல்லது. சமைத்த உணவுகள் இருந்தால் துளசி, தார்ப் புல் போடுவது நல்லது.