ஆடி மாதத்தில் வரும் அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.நம்முடைய ஜாதகத்தில் ராகுவின் தோஷங்கள் இருந்தால், அமாவாசை நாளில் சில வழிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்யலாம் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
அமாவாசை அன்று செய்ய வேண்டிய ராகு பரிகாரம்:
- ராகு தோஷம் நீங்க வேண்டுமானால் அமாவாசை அன்று ராகு ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
- அமாவாசை அன்று ராகு ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது அதன் எதிர்மறை விளைவுகளை கட்டுக்குள் வைத்திருக்கும்.
- ராகு தோஷம் குறைய சோமாவதி அமாவாசை அன்று அரச மரத்தடியில் தீபம் ஏற்றுவது நல்லது.
- இந்த தீபத்தை கடுகு எண்ணெயில் ஏற்ற வேண்டும். மேலும் அதில் கிராம்புகளை வைத்து வழிபட வேண்டும்.
5.இந்த பரிகாரத்தால், படிப்படியாக ராகு தோஷம் குறையத் தொடங்கும்.
6.சோமாவதி அமாவாசை அன்று கருப்பு நாய்க்கு ரொட்டி வழங்க ராகு தோஷம் குறையும். நோய்கள் நீங்கும். இது தவிர, ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.இவ்வாறு ஜோதிடர் கூறினார்.