ஃபெஞ்சல் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சென்னை – புதுச்சேரி இடையே பலத்த சூறைக் காற்றுடன் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது .
இந்நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரியில் 47 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மைலத்தில் 50 செ.மீ; கடலூரில் 18 செ.மீ, மரக்காணத்தில் 23.8 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்தாலும் தற்போது வரை மரக்காணத்தில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.