சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தினம்தோறும் கூட்டம் கூட்டமாக வரும் வடமாநில தொழிலாளர்களை தடுத்து நிறுத்தும் போராட்டமாக இருக்கும் என்று தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் வீரலட்சுமி மிரட்டல் விடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் தமிழக தொழிலாளரை தாக்கும் வீடியோ :
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனுபுரபாளையம், ஆத்து பாளையம், திருமுருகன் பூண்டி, வேலம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஏராளமான பின்னல் ஆடை நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் ஒடிசா, ஜார்கண்ட், குஜராத், பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அனுப்பர்பாளையம், கேளப்பாளையம், செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பணியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் 100-க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழக தொழிலாளர்களை விரட்டி விரட்டி,கட்டையால் தாக்கும் video காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வட மாநில தொழிலர்களின் எண்ணிக்கை குறித்து தேசிய தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் பூந்தமல்லி ஒன்றியம் செம்பரம்பாக்கம் பகுதியில் வசிக்கக் கூடியவர் முனுசாமி. அவருக்கு வயது 40. இவர் சுமார் 15 ஆண்டுகளாக சிப்காட் தொழிற்சாலைகள் பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் பணியில் இருந்த பொழுது பணிசுமை காரணமாக இயந்திரங்களில் சிக்கி அவரது கைகள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில் வேலை இழந்த தொழிலாளி சிப்காட் நிறுவனத்தில் வேலை வழங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த சிப்காட் தொழிற்சாலை நிறுவனம் இவருக்கு 50 ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே இழப்பிடி தந்ததாகவும்,இவருக்கு பதிலாக வட மாநில தொழிலாளர்களை பணியில் சேர்த்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் தனக்கு பணிவழங்க உதவ வேண்டும் என்று தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் வீரலட்சுமியை பாதிக்கப்பட்ட தொழிலாளி சந்தித்து உள்ளார்.மேலும் இது குறித்து வீடியோ ஒன்றை வீரலட்சுமி வெளியிட்டுள்ளார். அதை இந்த பதிவில் காணலாம்.