சென்னையில் கெத்து காட்டுவதில் தொடங்கிய பிரச்சனையில், மாநிலக்கல்லூரி மாணவர் குமாரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் அழைத்து சென்று மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். கூலித் தொழிலாளியான இவரது மகன் குமார் சென்னை மாநிலக்கல்லூரியில் (பிரசிடென்சி கல்லூரி) பி.ஏ. வரலாறு முதலாமாண்டு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை புறநகர் ரயிலில் சக நண்பர்களுடன் வந்துள்ளார். திருநின்றவூர் ரயில் நிலையம் வந்த போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் குமாரை ரயிலில் இருந்து இறக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.
அதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தன்னுடன் பயிலும் சக மாணவர்களுக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் பச்சையப்பாஸ் மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது என நண்பர்களே தப்பா நினைக்காதீங்க, அப்பா அம்மாவும் என்னை தப்பா நினைக்காதீங்க .. அவங்க போட்ட பிச்சையால் நான் வாழ முடியாது என உருக்கமாக பேசி இருந்தது உள்ளார்.
அந்த ஆடியாவை கேட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து குமாரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து குமாரின் கல்லூரி அடையாள அட்டையை வைத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.
இந்த நிலையில், ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் குமார் தற்கொலை செய்த வழக்கில் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பச்சையப்பன் கல்லூரி மாணவர் மனோஜை திருவள்ளூர் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.