மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவருக்கு சொந்தமான சொத்தை செல்லூர் ராஜுவின் ஆதரவாளர் எனக்கூறப்படும் முத்துகிருஷ்ணன் அபகரித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அருகில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மாரிமுத்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, தனது உறவினரான முத்துகிருஷ்ணனிடம் நீண்ட நாட்களாக பணியாற்றிய நிலையில் தனது தந்தை பெயரில் இருந்த சொத்துக்களை அப்போது அமைச்சராக இருந்த செல்லூர் ராஜுவின் பெயரைச்சொல்லி மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாகவும் ,
அதிமுக ஆட்சி நடைபெற்றதால் தன்னால் எதுவும் செய்ய இயலாத நிலையில் ஏற்கனவே தற்கொலை முயற்சி செய்து மீண்டு வந்த நிலையில் எனது சொத்துக்களை அவரிடம் கேட்டபோது கொலை செய்து விடுவதாக மிரட்டுவதால் எனது சொத்துக்களை மீட்டு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.