Indian Communist slams Modi : பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் தலைமை ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில்,முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும், தெலுங்கானாவில் 17 தொகுதிகளிலும்,
ஆந்திராவில் 25 தொகுதிகளிலும் , கேரளாவில் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதியும்,
3-ஆம் கட்டமாக மே 7 ஆம் தேதியும், 4-ஆம் கட்டமாக மே 13 ஆம் தேதியும், 5-ஆம் கட்ட தேர்தல் மே 20 ஆம் தேதியும், 6 மற்றும் 7-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : அரசு பள்ளிகளை மூடுவது தான் கல்வி வளர்ச்சியா? – அன்புமணி ஆவேசம்!!
தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் கட்சிகள் கையாள வேண்டிய சில கட்டுப்பாடுகளையும் தேர்தல் தலைமை ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
அவை : தேர்தல் பரப்புரையில் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்த கூடாது;
பரப்புரையின் போது, கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பரப்புரையில் ஈடுபட வேண்டும்
பரப்புரையின் போது மத ரீதியாகவோ தனிப்பட்ட முறையிலோ யாரையும் விமர்சிக்க கூடாது
பரப்புரையில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நம்பத்தகுந்த செய்திகளை போல சமூக வலைதளங்களில் பரப்பக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், தற்போது பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி இருப்பதாகக் கூறி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது Indian Communist slams Modi.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அட்டவணை கடந்த 16.03.2024 ஆம் தேதி பிற்பகலில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் நேற்று 18.03.2024-ஆம் தேதி, பிரதமர் மோடி, கோவை நகரத்தில் தெருத் தெருவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு உள்ளது.
இதையும் படிங்க : “சிக்கிய போட்டோ; வீடியோ..!” – பிரேமலதா விஜயகாந்த் மீது போலீஸ் வழக்கு
இந்த நிகழ்வுக்கு பள்ளிக் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பா.ஜ.க.வினர் மீதும், மோடியின் மீதும் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலகத்திறகு புகார் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.