கர்நாடக இசைப்பாடகர் carnatic-musician டி.எம்.கிருஷ்ணா விருது பெறுவதில் குழப்பம் ஏற்படுத்தும் சிலரின் முயற்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், சமூக சிந்தனையாளர், சுற்றுசூழல் ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் சிறந்த கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, TheMusicAcademy-இன் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Also Read : மேடையில் முழங்குவதால் எந்த பயனும் இல்லை – செல்வப்பெருந்தகை ஆவேசம்
சமூகம் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு உள்ள அசாத்திய இசைத்திறமையின் அடிப்படையில்தான் விருது கொடுக்கப் படுகிறது. ஆனால், அவர் விருது பெறுவதில் குழப்பம் ஏற்படுத்தும் சிலரின் முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
“வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை திறப்போம்” என்று மக்கள் தலைவர் ராகுல்காந்தி அடிக்கடி கூறுவார். அதுபோன்று அனைவரின் மீதும் அன்பு செலுத்துவோம் என்று தமிழ்நாடுகாங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.