78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி கால்பந்தாட்ட வீரர் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தேரிவிளை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரும், கால்பந்து வீரருமான வசந்த். பேனா மீது கால்பந்தை சுழற்றியபடியே 3 கி.மீட்டர் தூரம் நடந்து 3 சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார் .
Also Read : மீண்டும் ஏமாற்றம் – இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மனு தள்ளுபடி..!!
இவரின் இந்த சாதனை இந்தியா Book Of Records, ஆசியா புக், கலாம் ரெக்கார்ட் புக் என மூன்று சாதனை புத்தகங்களில் ஒரே நேரத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த சாதனைக்காக தொடர்ந்து இரண்டு வருடமாக பயிற்சி எடுத்துள்ளார். இந்தியாவில் கால்பந்து விளையாட்டை பிரபலபடுத்தும் நோக்கத்துடனும், கால்பந்து விளையாட்டில் அதிக அளவில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கோரி இந்த சாதனையை செய்ததாக தெரிவித்துள்ளார்.