குரூப் 2 தேர்வு(Group2Results) முடிவுகள் குறித்து இந்திய அளவில் குரூப் 2 என்ற ஹாஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள Group 2 பணியிடங்கள் 121, Group 2 ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அப்பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு முடிவுகள் முடிந்து கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் மாதம் வரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், Group 2 தேர்வுகளின் முடிவுகள் கால தாமதமாக ஆக்கப்படுவதாகவும்,ஒரு தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதில் தொடங்கி, முடிவுகளை அறிவதற்காக இரு ஆண்டுகள் காத்திருப்பது போட்டித் தேர்வர்களின் மனநிலையை கடுமையாக பாதிக்கப்படுவதாக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டங்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து டிசம்பரில் முடிவு வெளியிடப்படும் என்று அமைச்சர் அளித்த வாக்குறுதி அளித்திருந்தார்.ஆனால் இது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாக நிலையில் இன்று குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து இந்திய அளவில் குரூப் 2 என்ற ஹாஷ்டேக்(WeWantGroup2Results) இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.