அனைத்து துறைகளிலும் தோல்வி கண்ட துப்பற்ற ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்(c sampath) குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல்முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் எம்சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்,கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 1000திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்சி.சம்பத்,
செந்தில் பாலாஜி பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தான் இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான நோக்கம்,”கூடா நட்பு கேடாய் முடியும் என்னும் நேரம் செந்தில் பாலாஜிக்கு வந்துள்ளது”என்றும், ஜெயலலிதாவை ஏமாற்றிய குற்றவாளி,அமைதிப்படை சத்யராஜ் தான் செந்தில் பாலாஜி எனவும் விமர்சனம் செய்தார்.
ஆளும் திமுக அரசு சாராய சாவுக்கு 10லட்சமும், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் அளித்தது நியாயமா? என கேள்வி எழுப்பினார்.மேலும் அனைத்து துறைகளிலும் தோல்வி கண்ட துப்பற்ற ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் குற்றம் சாட்டினார்.