நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது :
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான். பாதிக்கபட்ட பெண் துணிச்சலோடு புகார் அளிக்க அரசின் மீது இருந்த நம்பிக்கையே காரணம்.
இந்தியாவையே நடுங்க வைக்கும் பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பாஜக ஆட்சியில் தான் அரங்கேறியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை வைத்து அதிமுக, பாஜக சதி செய்கிறார்கள்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அதிமுக ஆட்சியில் மூடிமறைக்க பார்த்தனர். அதுமட்டுமல்லாது, அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்ததால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பயந்தனர். ஆனால் இந்த சம்பவத்தை வெளிப்படையாக விசாரித்து வருகின்றோம். எனவே அதிமுக யோக்கியதையை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள் .
Also Read : ஜன.10க்குள் விலையில்லா வேட்டி சேலைகளை அனுப்ப உத்தரவு..!!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கும், திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. சிலர் திமுக மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். இந்தவழக்கில் உடனடி நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது. வழக்கை மறைக்க வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் குறித்தோ, குற்ற வழக்கு குறித்தோ எந்த விவரமும் அரசு சார்பில் வெளியிடப்படவில்லை. அண்ணாமலை சொல்லும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது.
“ராமேஸ்வரத்தில் அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் என்பவரின் மருமகன் ராஜேஷ் கண்ணன் என்பவர் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் அந்த புகைப்படங்களை வைத்து பெண்களை மிரட்டினாரா என்பது குறித்தும் விரைவில் விசாரணையில் தெரியவரும்.”