டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையுடன் எந்த தகராறும் கருத்து வேறுபாடும் இல்லை என தெரிவித்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷாவை நேற்று அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான பிறகு எடப்பாடி பழனிசாமி நேற்று முதன் முறையாக சந்தித்தார். இந்த சந்திப்பில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் சந்திப்பு முடிந்தவுடன் இன்று செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என்றும் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என தெரிவித்தார்.
மேலும் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பதை நீதிமன்றம் அங்கீகரித்தது மகிழ்ச்சி என்று தெரிவித்த அவர், பிடிஆர் ஆடியோ குறித்து செய்தியாளர் கேள்விக்கு,அவர் பேசியது உண்மையாக இருந்தால் அது நிச்சயம் ஆபத்தானது என்றும், அந்த ஆடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.