தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்கள் இணைந்ததன் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, சென்னை நேரு உள் விளையாடு அரங்கில் நடைபெற்றது.அதில் மகளிர் காவலர்கள் நலன் தொடர்பான 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழ்நாடு காவல் துறையில் 1973ஆம் ஆண்டு முதல் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த ஆண்டு தமிழ்நாடு மகளிர் காவல் துறையின் பொன்விழா ஆண்டாகும். இதன்படி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தமிழக காவல்துறையில் பெண் காவலர்களின் பொன்விழா விழாவில் ‘அவள்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சைக்கிள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த அவர், பெண் காவலர்களுக்கான 9 அறிவிப்புகளை வெளியிட்டார்.
- ரோல் கால் எனப்படும் போலீஸ் வருகை அணிவகுப்பு 7க்கு பதிலாக 8 மணிக்கு நடைபெறும்.
- சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்களுக்கான தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
- அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வு அறை கட்டப்படும்.
- தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும்.
- கலைஞர் காவல் துறை விருது மற்றும் கோப்பை ஆண்டுதோறும் வழங்கப்படும்.
- பெண் காவலர்களுக்கு விடுமுறை வழங்கவும், குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப பணியிட மாற்றம் செய்யவும் அறிவுறுத்தப்படும்.
- ஒவ்வொரு ஆண்டும் பெண் காவலர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடத்தப்படுகிறது.
- பெண் காவலர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆண்டுதோறும் காவல் துறையில் பெண்கள் தேசிய மாநாடு நடத்தப்படுகிறது.
- பெண் காவலர்களின் நலனுக்காக தொழில் ஆலோசனைக் குழு அமைக்கப்படும். உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.