திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இசைஞானி இளையராஜா(ilayaraja )திடீர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
108 வைணவ தளங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும்.திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தங்களது நேர்த்தி கடன் நிறைவேற்றும் வகையில் திடீரென விஐபிக்கள வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றிச் செல்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று காலைபிரபல திரைப்பட இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா(ilayaraja)ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இளையராஜா சக்கரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதியில் சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர்மூலஸ்தானத்தில் உள்ள ரங்கநாதர் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்.