வைத்தியலிங்கத்தை பொறுத்தவரை என்னையும் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் காமராஜர் அவர்களையும் வசை பாடுவதை வழக்கமானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து உள்ளார்.
சென்னை ராயப்பேட்டை தனியார் மண்டபத்தில், அதிமுக, அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த 314 தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவியை வழங்கினார்.
அண்ணா தொழிற்சங்கப் பேரவை உறுப்பினர்களில் நலிவடைந்த 314 தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 3 கோடியே 14 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநிலச் செயலாளர் ஆர்.கமலக் கண்ணன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
திமுகவினருக்கு வசூல் செய்து தான் பழக்கம் தவிர நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது கிடையாது.நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட 310 பேரில் 136 பேர் பெண்கள்.வைத்தியலிங்கத்தை பொறுத்தவரை என்னையும் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் காமராஜர் அவர்களையும் வசை பாடுவதை வழக்கமானது.
நான் ஐட்டி மினிஸ்டர் ஆக இருந்த காலகட்டத்தில் இந்தியாவிலேயே மென்பொருள் ஏற்றுமதி செய்வதில் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு இருந்தது.வைத்திலிங்கம் திமுகவின் பி டீமாக மாறி செயல்பட்டு வருகிறார்.வைத்திலிங்கம் போன்ற ஆட்கள் எங்களுடன் இருந்ததால் தான் தோல்வியே.
தஞ்சாவூரில் மூப்பனாருக்கு பிறகு 2000 ஏக்கர் நிலப்பரப்பு வைத்தியலிங்கத்திற்கு தான் உள்ளது. ஆட்சியில் இருந்து சம்பாதித்து விட்டு இன்று திமுகவிற்கு விலை போய் கட்சியை குறித்து விமர்சனம் செய்வதை எந்த தொண்ட நாளும் ஏற்றுக் கொள்ள முடியாது.
வைத்திலிங்கம் ஓபிஎஸ் டிடிவி தினகரன் அனைவரும் பொய்க்கால் குதிரைகள்.ஓபிஎஸ் வைத்திலிங்கம் அனைவரும் ஸ்டாலினை வைத்து இன்று பொம்மலாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.
லாரியில் அடிபட்டு இருந்தால் இரண்டு லட்சம் பில்டிங் விழுந்து இருந்தால் 2 லட்சம் சிலவிதமான மரணங்களின் போது ஒரு லட்சம் . கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசினுடைய வரிப்பணத்தில் இருந்து நிவாரணம் அளிப்பது எதயோ மூடி மறைக்கின்ற செயல் இது.
உலகத்தில் எங்கேயாவது கள்ளச்சார வியாபாரிக்கு ஐம்பதாயிரம் கொடுத்திருப்பார்களா. கள்ளச்சாராய வியாபாரிக்கு ஐம்பதாயிரம் நிவாரணம் அளிக்கப்படுகிறது என்றால் இது எந்த அளவுக்கு முட்டாள்தனம் வாய்ந்த ஆட்சியாக உள்ளது. அறிவில்லாத அரசு தான் இன்று தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது.
கள்ளச்சாராய வியாபாரம் திமுக ஆட்சியில் கொழுத்து போய் இருக்கிறது.மக்களுடைய வரிப்பணத்தில் அவர்களுக்கு ரோடு போட்டு தரவும் விளக்கு வசதி ஏற்படுத்தி தரவும் முடியாமல் கடலில் பேனா வைப்பதற்கு என்ன அவசியம்.
திமுகவின் அறக்கட்டளை மூலமாக வரக்கூடிய பணத்தை வைத்து அறிவாலயத்தில் பேனா சிலையை 600 அடிக்கு கூட நிறுவிக்கொள்ளட்டும் அதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சயணியும் இல்லை.
மீனவர்களை வாழ்வாதாரத்தை பாதிக்கும் பேனா வைப்பது எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் நிச்சயமாக இதில் நீதியை வெல்லுவோம் என தெரிவித்துள்ளார்.