திருச்சி அருகே ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு குடும்பத்தினரை தமிழகத்தில் ஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள சோழன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் இவர் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி ரோந்து பணியில் இருந்த பொழுது அதிகாலை ஆடு திருடிச் சென்றவர்களை விரட்டி கொண்டு கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி அருகே பிடித்துள்ளார் அப்போது ஆடு திருடியவர்கள் பூமிநாதனை சரமாரியாக வெட்டி கொன்றனர். இதில் சம்பவ இடத்திலேயே பூமிநாதன் உயிர் இழந்தார்.
இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாநகரில் உள்ள பூமிநாதன் வீட்டிற்கு நேரில் வந்து, அவரது உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது மனைவி கவிதா மகன் குகன்பிரசாத் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சைலேந்திரபாபு கூறியதாவது;
பூமிநாதன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வீரமரணம் அடைந்துள்ளார். அவர் தமிழக முதல்வர் பதக்கம் பெற்றுள்ளார் என்றும் தீவிரவாத கமாண்டோ பயிற்சி பெற்றதாகவும் கடமை உணர்வுடன் வீரமும் விவேகத்துடன் செயல்பட்டு உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், 15 கிலோமீட்டர் தூரம் ஆடு திருடர்களை விரட்டி சென்றதோடு அவர்களை பிடித்து அவரிடம் இருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்து பாதுகாப்புடன் நடந்து கொண்டார்.
தமிழ்நாடு காவல்துறையின் கடமை மிக்க காவல்துறை என்று கூறியதோடு பூமிநாதன் இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் அறிவித்துள்ளார்.
மேலும் அவரது மகனுக்கு வேலை வழங்குவதற்கு அறிவித்திருப்பதற்கு, தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
மேலும் காவல்துறை ஆரம்பிக்கப்பட்ட 1856 ஆண்டு முதலே காவல்துறையினர் மீது, தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த துறை சவால் மிக்கது என்றும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத துறை அதை எப்படி எதிர் கொள்கிறோம் என்பதுதான்.
இது போன்று நடக்காமல் இருப்பதற்கு காவல்துறைக்கு ஆயுத பயிற்சி, கைத்துப்பாக்கி பயிற்சிகள் அதிகாரிகள் மட்டத்தில் இரண்டு மாதமாக கொடுக்கப்பட்டு வருவதாகவும், காவல்துறையினருக்கு 6 தோட்டாக்கள் வழங்கப்பட வேண்டும்.
குற்றவாளிகள் காவல்துறையினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும்போது ஆயுத பிரயோகம் செய்யலாம் என்பது சட்டம் சொல்வதாகும். சட்டத்தை மதித்து துப்பாக்கிகளை பயன்படுத்த தயங்க கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பூமிநாதன் பணிபுரிந்த திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல் நிலையத்திற்குச் சென்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.