தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று உறுதியானவர்களில் 6 பேருக்கு சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் பாதித்தவர்களில் 7 பேர் சென்னையிலும், கன்னியாகுமரி, திருவண்னாமலை, திருவாரூரில் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இதுவரை 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதித்தவர்களில் 4 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.