2022-23 நிதியாண்டில் ரூ.3.69 லட்சம் சொத்து வரி செலுத்தாமல் ரோஹினி திரையரங்க நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘பத்து தல’ படம் வெளியானது.சிம்புவின் பத்து தல படம் (pathu thala movie) நேற்று வெளியானது.
இதில், பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, மலையாள நடிகை அனு சித்தாரா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து கே.ஈ.ஞானவேல் ராஜா ஸ்டூடியோ கிரீன் சார்பில், பத்து தல படத்தை (pathu thala movie) தயாரித்து உள்ளார்.இந்நிலையில், நேற்று இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிம்புவின் பத்து தல படம் படத்தை பார்க்க வந்த நரிகுறவர்களை (narikurava) திரையரங்கு ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காத வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு ஜி.வி.பிரகாஷ், விஜய் சேதுபதி, வெற்றிமாறன், கமல்ஹாசன், நடிகர் சூரி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனையெடுத்து ரோஹிணி தியேட்டரில் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்க மறுத்த விவகாரத்தில் நிர்வாகிகள் 10 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுரவாயல் உதவி காவல் ஆணையர் முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 2022-23 நிதியாண்டில் ரூ.3.69 லட்சம் சொத்து வரி செலுத்தாமல் ரோஹினி திரையரங்க நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாநகராட்சி 10,000 ரூபாய் அபராதமும் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த காலங்களில் நிலுவையில் உள்ள 24 லட்சம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.