நடிகையும், பாஜக ஆதரவாளரும், நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகளுமான மதுவந்தி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் கொடுப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளியில் சீட்டு வாங்கித்தருவதாகக் கூறி 6 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு மதுவந்தி ஏமாற்றியதாக மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கோவில் நிர்வாகியான கிருஷ்ணாபிரசாத் என்பவர் சென்னை காவல் ஆணையரிடத்தில் இந்த புகாரை அளித்துள்ளார்.
அந்த புகாரில், பத்ம சேஷாத்திரி பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க ஒரு சீட்டுக்கு மதுவந்தி தலா மூன்று லட்ச ரூபாய் கேட்டதாகவும், அதன்படி 19 லட்சம் ரூபாயை தான் கொடுத்ததாகவும் ஆனால் இறுதியில் சீட்டு வாங்கித் தராததால் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
அதன்பிறகு மதுவந்தி 13 லட்சத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும், மீதமுள்ள பாக்கி 6 லட்சத்தை தருவதாக தன்னை அழைத்த மதுவந்தி அடியாட்களை வைத்து தாக்கியதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகாரை மதுவந்தி தரப்பு மறுத்துள்ளது.