சூப்பர் ஸ்டார் ரஜினியின் “தலைவர் 171” படத்தின் அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. தலைவர் 171 படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகியுள்ளார். அன்பறிவ் பிரதர்ஸ் ஸ்டண்ட் மாஸ்டர்களாகவும் கமிட்டாகியுள்ளனர்.
கடந்த மாதம் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியான நிலையில், இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. இதையடுத்து, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன், ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார் பரிசாக அளித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், நேற்று ஜெயிலர் சக்சஸ் மீட்டிங் நடத்தி படக்குழுவினருக்கும் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், ரஜினி – சன் பிக்சர்ஸ் இணையும் அடுத்த படத்தின் அறிவிப்பு அதிரடியாக வெளியாகியுள்ளது.
அதன்படி, தலைவர் 171 என்ற போட்ஸ்டர் மட்டுமே தற்போது வெளியாகியுள்ள நிலையில், டிவிட்டரில் தலைவர் 171 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் டாப்பில் உள்ளது. இந்தப் படம் லோகேஷின் யுனிவர்ஸில் இணையுமா அல்லது வேறு கதையா என்பது குறித்த தகவல் இனி வரும் நாட்களில் தான் தெரியவரும்.
லோகேஷ் தற்போது விஜய்யின் லியோ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் நிலையில், அதனை முடித்த பின்னர், தலைவர் 171 ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கும் எனத் தெரிகிறது.
முன்னதாக தலைவர் 171 படத்தில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக லோகேஷ் விலகியதாக தகவல்கள் வெளியானது. தற்போது வெளியாகி உள்ள இந்த அப்டேட் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரியில் தலைவர் 171 ஷூட்டிங்கை தொடங்க லோகேஷ் பிளான் செய்துள்ளதாகவும், தலைவர் 171 படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியிடவும் சன் பிக்சர்ஸ் முடிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அடுத்த ஆண்டிற்குள் மொத்த படத்தையும் முடித்துவிடுவதற்கு லோகேஷ் கனகராஜ்ஜும் ஓகே சொல்லிவிட்டாராம்.
