தாமரை மாநாடு : நமது அணு விஞ்ஞானிகளின் இந்த புரட்சிகரமான தொழில்நுட்ப முன்னேற்றம் பாரதத்தை மீண்டும் பிரதமர் பெருமையடையச் செய்துள்ளதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு ஒரு நாள் பயணமாக சென்னைக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். நேற்று மதியம் சென்னை வந்த நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக கல்பாக்கம் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையின் துவக்கப் பணியைப் பார்வையிட்டார்.
அதன் பிறகு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தாமரை மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,சிறப்புரை ஆற்றினார்.
இதையும் படிங்க: என் 16-வது வயதில் தேசத்திற்காக வீட்டை விட்டு வெளியேறினேன் – பிரதமர் நரேந்திர மோடி
அதன் பிறகு பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி,”சென்னை நகரம் முழுவதும் வெளிச்சத்தால் சூழ்ந்துள்ளது . ஒவ்வொருமுறையும் நான் சென்னைக்கு வரும் போதெல்லாம் எனக்குள் சக்தி உண்டாகிறது .
திறமைகள், வர்த்தகம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் நகரம் சென்னை வளர்ச்சியான இந்தியாவை உருவாக்குவதில் சென்னை மக்களின் பங்கு மிக முக்கியமானது
இந்தியாவின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகிறேன் . எரிசக்தி துறையில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், நமது அணு விஞ்ஞானிகளின் இந்த புரட்சிகரமான தொழில்நுட்ப முன்னேற்றம் பாரதத்தை மீண்டும் பிரதமர் பெருமையடையச் செய்துள்ளதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1764639604135866388?s=20
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..நமது அணு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்! இன்று பாரதம் தொழில்நுட்ப முன்னேற்றத்திலும் எரிசக்தியிலும் தன்னிறைவைப் பெற்று மற்றுமொரு வரலாற்றுபூர்வ மைல்கல்லை எட்டியுள்ளது.
மேலும் பிரதமர் கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 500 மெகாவாட் விரைவு ஈனுலை மைய செயல்பாட்டைத் தொடங்கி வைத்தார்.
நமது அணு விஞ்ஞானிகளின் இந்த புரட்சிகரமான தொழில்நுட்ப முன்னேற்றம் பாரதத்தை மீண்டும் பெருமையடையச் செய்துள்ளதுடன் இந்த வசதியைப் பெற்ற உலகின் இரண்டாவது நாடு என்ற பெருமையையும் பெற்றுத் தந்துள்ளது.
இதற்கு வித்திட்ட பிரதமர் மோடியின் துணிச்சலான மற்றும் தொலைநோக்குத் தலைமைக்கு நன்றி. தேசம் தன்னம்பிக்கையுடன் அமிர்தகாலத்தில் முழுமையாக வளர்ச்சியடைந்த பாரதம் ஆகும் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்கிறது என்று தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.