சென்னை சேலையூரை அடுத்த சந்தோஷபுரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வர துவங்கியுள்ளது. இந்நிலையில் உடனடியாக சுதாரித்துக் கொண்ட கார் ஓட்டுநர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்க, காரில் இருந்தவர்களும் இறங்கி விட்டனர்.
சிறிது நேரத்தில் பற்றிய தீ மளமளவென கார் முழுவதும் பரவி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இதனால் வேளச்சேரி பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
அருண்குமார் என்பவர் தனது குடும்பத்தோடு பள்ளிகரணையில் இருந்து தூத்துக்குடிக்கு திருமண நிகழ்விற்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிய போது கார் தீப்பிடித்துள்ளது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.