உத்தரபிரதேச கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் மாநில அளவிலான U-17 பெண்கள் கபடிப் போட்டி நடத்தப்படும் போட்டியாகும். இதில் சுமார் 200 வீரர்கள் பங்கேற்கின்றனர். மழையின் காரணமாக விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் இருந்து உணவு கொண்டு செல்லப்படும் வீடியோ செப்டம்பர் 16ஆம் தேதி சஹாரன்பூரில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டியின் போது சில வீரர்களால் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1 நிமிட வீடியோவில், ஃபிரேமில் சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் வாஷ் பேசின்களைக் காட்டப்படுகிறது அதன் வாயிலுக்கு அருகில் உள்ள கழிப்பறைத் தரையில் வைக்கப்பட்டுள்ள சாப்பாடு காண்பிக்கப்படுகிறது.
यूपी की कबड्डी खेलने वाली बेटियों को टॉयलेट में खाना परोसा गया।
झूठे प्रचार पर करोड़ों खर्च करने वाली BJP सरकार के पास हमारे खिलाड़ियों के लिए अच्छी व्यवस्था करने के पैसे नहीं हैं।
धिक्कार है! pic.twitter.com/UazJvCrWPB
— Congress (@INCIndia) September 20, 2022
மீண்டும் விளையாட்டு வீரர்கள் உணவை எடுத்துக்கொண்டு கழிப்பறைக்கு வெளியே செல்வதைக் காணமுடிகிறது. இரண்டாவது வீடியோ, ஊழியர்கள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, உணவு சமைக்கப்படும் நீச்சல் குளத்தின் அருகே வெளியே கொண்டு வருவதைக் காட்டுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சஹாரன்பூர் விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனா இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று நிராகரித்துள்ளார். “இங்கு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு அனைத்தும் தரமானதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுகளை மறுத்த மாவட்ட விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை அதிகாரிகள் உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளனர்.
यूपी की कबड्डी खेलने वाली बेटियों को टॉयलेट में खाना परोसा गया।
झूठे प्रचार पर करोड़ों खर्च करने वाली BJP सरकार के पास हमारे खिलाड़ियों के लिए अच्छी व्यवस्था करने के पैसे नहीं हैं।
धिक्कार है! pic.twitter.com/UazJvCrWPB
— Congress (@INCIndia) September 20, 2022
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது. அதை கழிவறையில் வைக்கவில்லை, மழை பெய்ததால், நீச்சல் குளம் பகுதியில் உணவுக்கு ஏற்பாடு செய்தோம். நீச்சல் குளத்திற்குப் பக்கத்தில் உள்ள உடை மாற்றும் அறையில் உணவு வைக்கப்பட்டது. ஸ்டேடியத்தில் சில கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மழையின் காரணமாக உணவை வைக்க வேறு இடம் தேவைப்பட்டது என கூறப்படுகிறது
கழிவறையில் உணவு வைக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானவுடன், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தங்கள் கருத்துக்களை அதிருப்தியை வெளிப்படுத்தினர். சிலர் இதை வெட்கக்கேடானது என்றும், சிலர் இதுபோன்ற உணவுகளை ஊட்டி, நமது வீரர்களிடம் தங்கப்பதக்கத்தை எதிர்பார்க்கலாமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் போட்டி முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள வீரர்களின் பங்கேற்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.