மதுரையில் பட்டபகலில் முக்கிய பகுதியில் ஆவின் நிறுவன கண்காணிப்பாளரின் வீட்டில் கதவை உடைத்து 32 பவுன் நகை, வெள்ளி, பணம் கொள்ளை.
மதுரை அண்ணாநகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள நியூ HIG குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் இவரது மனைவி கல்பனா இவர் மதுரை ஆவினில் கண்காணிப்பாளராக பணிபுரிந்துவருகிறார். இவரது கணவர் சுந்தராஜனும் ராணுவத்தில் இருப்பதால் பணிக்கு சென்ற கல்பனா நேற்று வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து மதியம் உணவிற்காக வீட்டிற்கு வந்த கல்பனா வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அண்ணாநகர் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களுடன் உள்ளே சென்று பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 32 பவுன் நகை, இரண்டரை கிலோ வெள்ளி மற்றும் ரூபாய் 65 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அருகில்உள்ள சிசிடிவி கேமிராக்களை காவல்துறையினர் கைப்பற்று ஆய்வு செய்துவருகின்றனர்.
கல்பனாவின் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவ தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
மதுரையில் பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் என்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.