கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை பரங்கி மலையில் நடந்த கொலை வழக்கில், கண்ணன் (56) என்பவருக்கு பூவிருந்தவல்லி விரைவு நீதிமன்றம் 2007ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது
இந்நிலையில் புழல் சிறையில் இருந்த கண்ணனுக்கு 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 5 நாட்கள் நீதிமன்றம் பரோல் விடுப்பு வழங்கிய நிலையில், வெளியே வந்த அவர் தலைமறைவானார்.
Also Read : விண்வெளி மையம் செல்லும் ககன்யான் வீரர் – அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு..!!
இந்நிலையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோல் விடுப்பில் வெளிவந்து, 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கண்ணன் என்பவரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேளங்கண்னியில் பதுங்கியிருந்த கண்ணனை 12 ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.