பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் (PCB) வாரியம் நியமித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக பெரிய அளவில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது.
இதனால் அந்நாட்டில் உள்ள கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டு புதிய அணியை உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.
இதன்காரணமாகவே கம்பீர கேப்டனாக இருந்து வந்த பாபர் அசாம் 3 வடிவிலான கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தார். அவருக்கு பதிலாக டி20, ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக சஹீன் அப்ரிடி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவல் என்னவென்றால் மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக தொடர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : https://itamiltv.com/pm-modi-publicly-accused-the-congress-during-the-election/
டி20 உலகக் கோப்பை போட்டி வருகிற ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ள நிலையில் பாபர் அசாம் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது அவருக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக கருதப்படுகிறது .
இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி (PCB) ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது .