Roof falled children’s heads : திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள அத்தி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கனிம வள நிதியின் கீழ் 17 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அப்பகுதி மாணவ, மாணவிகள் புதியதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட இந்த பள்ளியில் பயின்று வந்துள்ளனர்.
இதையும் படிங்க : தப்புக்கணக்கு போடுகிறார் நிர்மலா சீதாராமன் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..!!!
இன்று (04.04.24) 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படித்துக் கொண்டிருந்த போது, திடீரென பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த சிமென்ட் கார்கள் பெயர்ந்து பள்ளி மாணவர்கள் தலையில் விழுந்துள்ளது.
சிமென்ட் கார்கள் வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்கள் தலையில் விழுந்த நிலையில், 5 மாணவர்கள் காயமடைந்தனர்.
அதையடுத்து உடனடியாக காயமடைந்த மாணவர்களை மீட்ட ஆசிரியர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Roof falled children’s heads : இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
“இந்த பள்ளி கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற முறையில் கட்டி அவசர அவசரமாக இந்த கட்டிடம் திறக்கப்பட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பள்ளி கட்டடம் கட்டிய ஒப்பந்ததாரர் மீதும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : 4 நாட்களில் 3 ‘ரோடு ஷோ’..! – மோடியின் தமிழக ‘புரோக்ராம்’ இதுதான்!