பிரமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் நியமிக்கப்படும் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்ட முன்மொழிதல் தொடர்பான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்;
பிரதமர் மோடியில் சொந்த மாநிலமான குஜராத்திலேயே துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது; துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக் கூடாது என பேசினார்.