அஜித் நடிப்பில் முழுக்க முழுக்க வெளிநாட்டில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வந்த விடாமுயற்சி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித்,ஆரவ்,அர்ஜுன் , திரிஷா ,ரெஜினா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் திடீரென படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்தது.
Also Read : “திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை” – சீமான் ஆவேசம்..!!
இந்நிலையில் இப்படம் எப்போது திரைக்கு வரும் என அனைவரும் காத்திருந்த நேரத்தில் படத்தின் ட்ரைலரை தற்போது வெளியிட்டுள்ள படக்குழு ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது அதன்படி இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதோ விடாமுயற்சி படத்தின் ட்ரைலர்..