தமிழில் மதராசபட்டினம், தெறி, ஐ போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டைப் பார்த்து ரசிகர்கள் எமி ஜாக்சனா இது? என ஷாக் ஆகி உள்ளனர்.
ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டிணம் படத்தில் வெளிநாட்டு பெண் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்தி இருந்தார் எமி. மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான எமி ஜாக்சனுக்கு அந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவியத்தொடங்கின.
அதன் தொடர்ச்சியாக நடிகர் விக்ரம் உடன் தாண்டவம் மற்றும் ஐ, விஜய் உடன் தெறி, ரஜினிக்கு ஜோடியாக 2.0 போன்ற படங்களில் நடித்தார். இதற்கிடையே லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்த எமி ஜாக்சன் அவரும் லிவ்விங் டுகெதராக வாழ்க்கையும் நடத்தி வந்தார்.
திருமணத்துக்கு முன்னரே லிவின்ல் இருந்து ஆண் குழந்தை பெற்றுக்கொண்ட இந்த ஜோடி, குழந்தை பிறந்த பின்னர் நிச்சயம் செய்து திருமணம் நெருங்கிய சமயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரிந்துவிட்டனர்.
தற்போது எட் வெஸ்ட்விக் என்கிற நடிகரை காதலித்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும். தற்போது தன் காதலனுடன் சேர்ந்து கவர்ச்சி உடை அணிந்து வித்தியாசமான போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார் நடிகை எமி. அந்த போட்டோஷூட்டுக்கு லைக்குகளும், கமெண்ட்டுகளும் அதிகளவில் குவிந்து வருகின்றன.
எமி ஜாக்சனின் ஏடாகூடமான இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எமி பார்ப்பதற்கு அயர்லாந்து நடிகர் சிலியன் மர்பி போல இருப்பதாக ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சிலர் அந்த புகைப்படத்தில் எமி ஜாக்சனின் முகமும் வித்தியாசமாக இருப்பதனால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.