Thirumavalavan : பில்கிஸ் பானுக்கு நீதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் நீதிக்காக போராடிய அவருக்கு இன்று உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிற தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது ரயில் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறை கலவரத்தில் இருந்து தப்பிக்க முயன்ற பில்கிஸ் பானு குடும்பத்தை 11 பேர் கொண்ட கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கியது.
மேலும், 5 மாத கர்ப்பினியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டசம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பில்கிஸ் பானு அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம், 2008ஆம் ஆண்டு 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.
Also Read :https://itamiltv.com/seeman-condemn-dravidian-parties/
சுமார் 14 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர்களை கடந்த 2022ஆம் ஆண்டு நன்னடத்தை காரணமாக குஜராத் அரசு முன்விடுதலை செய்தது.
இதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு குறித்து விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனி அமர்வு ஒன்றினை அமைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 11 பேரை விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை,
வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால் மகாராஷ்டிர அரசு தான் விடுதலை செய்ய முடியும் எனத் தெவித்த நீதிமன்றம், 11 பேரை விடுதலை செய்யும் குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற வன்முறையில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட நிலையில்,
மீண்டும் அவர் நீதிக்காக போராடினார். இன்று உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிற தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது.
குஜராத் அரசு கடந்த ஆண்டு குற்றவாளிகள் 11 பேருக்கும் விடுதலையும் பொதுமன்னிப்பும் அளித்தது. “அது அரசமைப்புச் சட்டத்தை மோசடி செய்து எடுக்கப்பட்ட ஒரு முடிவு .
ஆகவே அந்த 11 பேரையும் இரண்டு வாரங்களுக்குள்ளாக சிறைப்படுத்த வேண்டும், அவர்கள் குற்றவாளிகள் தான்’ என்று உச்ச நீதிமன்றம் இன்றைக்கு வழிகாட்டி இருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இதனை வரவேற்கிறது பாராட்டுகிறது.
Also Read :https://x.com/thirumaofficial/status/1744437423004930122?s=20
சங்பரிவார்கள் குறிப்பாக பாஜகவினர் சட்டத்தையும் நீதித்துறையையும் தங்கள் விருப்பம் போல் வளைத்துக் கொள்கிறார்கள்,
கொடூரமான குற்றச் செயல்களை கூட மன்னித்து விடுகிறார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சான்று.
அவர்கள் சட்டத்தை மதிக்க கூடியவர்களாகவும் இல்லை ஜனநாயகத்தை மதிக்க கூடியவர்களாகவும் இல்லை.
இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் நிலை என்னவாகும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இத்தகைய தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு எமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று (Thirumavalavan) குறிப்பிட்டுள்ளார்.