டுவிட்டருக்கு போட்டியாக இந்தியாவில் வெளியான ‘திரெட்ஸ்’ சமூக வலைதளத்தில் சில மணி நேரங்களிலேயே, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, பல ஆண்டுகளாக டுவிட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்து வந்த நிலையில், அண்மையில் அதனை உலக கோடீஸ்வர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கி சந்தா செலுத்தினால்தான் பிரத்யேக சேவைகள் கிடைக்கும் என்று அறிவித்தது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், தேவையற்ற பதிவுகளை நீக்குவது, தரவுகள் வீணாவதை குறைக்கும் வகையிலும் டுவிட்டர் பதிவுகளை பார்க்க என எலான் மஸ்க் அண்மையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வந்தார்.
இந்நிலையில் தற்போது எலான் மஸ்க்கின் டுவிட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிதாக திரெட்ஸ் என்ற செயலியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
அதையடுத்து, டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா களமிறக்கியுள்ள திரெட்ஸ் சமூக வலைதளம் இந்தியாவில் வெளியான சில மணி நேரங்களிலேயே, 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரெட்ஸ் சமூக வலைதளத்தினை பயனர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்து லாகின் செய்து கொள்ளலாம் எனவும், 500 எழுத்துக்கள் வரை இதில் உபயோகிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டுவிட்டருக்குப் போட்டியாக களம் இறங்கியுள்ள மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் சமூக வலைத்தளம் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.