உலககோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு தொடங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் லீக் போட்டியில் இதுவரை இந்திய , தென்னாப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அதிகாரபூர்வமாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன .
இந்நிலையில் மீதம் இருக்கும் அணிகள் அரையிறுதி வாய்ப்பை எட்டிப்பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது . அதேபோல் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து இதுவரை நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியுள்ளது.
இந்நிலையில் உலககோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு தொடங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
50 ஓவர் உலககோப்பை அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை, இன்று இரவு 8 மணிக்கு BookMyShow இணையதளத்தில் தொடங்குகிறது . கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்த டிக்கெட் பெற்று விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டியை கண்டுகளிக்குமாறு கேற்றுக்கொள்ளப்படுகிறது.
உலககோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் வரும் 15ம் தேதி மும்பையிலும், 2வது அரையிறுதி ஆட்டம் வரும் 16ம் தேதி கொல்கத்தாவிலும் மற்றும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி வரும் 19ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.