சம்பாதித்த அனைத்தையும் பதுக்கி வைத்துவிட்டு நான்கு கோவிலுக்கு சென்று ஐந்து அய்யர்களை பார்த்து ஆசிர்வாதம் வாங்கவே அண்ணாமலை லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளதாக மறைமுகமாக பாஜக ஆதரவாளர் சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்கு அவர் ஆறு நாட்கள் தாங்கும் அவர் லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து பாஜகவின் 9 கால சாதனை ஆட்சி குறித்து பேசி வருகிறார்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்குழு கூட்டங்களை தொடர்ந்து தற்பொழுது லண்டனிலும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் 2024 ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்க்கான முன் ஏற்பாடுகளாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் பாஜக ஆதரவாளர் sv சேகர் பாஜக தலைவர் அன்னமையின் லண்டன் பயணம் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் அண்ணே என்ன திடீர் லண்டன் பயணம்⁉️எதிர் கட்சி ஆளுங்க கள்ள பணத்தை அங்க பதுக்கி வச்சதை கண்டுபிடிச்சு…சூப்பரண்ணேஅதே இடத்துல நான் சம்பாதிச்சதை புதுக்கி வைச்சுட்டு 4 கோயிலுக்கு போய் 5 ஐயருங்களை பாத்து ஆசி வாங்கிட்டு வந்துடுவேன். என அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.