தீபாவளிக்கு அடுத்த நாள் (13.11.23) திங்கட்கிழமை பொதுவிடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (12.11.23) அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாட பெரும்பாலான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை (12.11.23) அன்று தீபாவளி பண்டிகை வருவதையொட்டி அதற்கு அடுத்த நாள் (13.11.23) திங்கட்கிழமை அன்று அலுவலகங்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் செல்வதில் சிரமம் இருப்பதால் திங்கட்கிழமை பொது விடுமுறை ஆக அறிவிக்கும் படி தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை என தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தீபாவளிக்கு மறுநாளான 13 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் திங்கட்கிழமை அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 18 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.