தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோகள் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அவை எல்லாம் கட்டுக்கதை என நிரூபிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மிகவும்
பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பை எப்போதும் தமிழ்நாடு அரசு உறுதி செய்து கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் போன்ற தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் வடநாடு பண்டிகையான ஹோலி திருநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தமிழர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களின் ஒற்றுமை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்#யாதும்ஊரேயாவரும்கேளிர் #Harmony #Unity #MigrantWorkers #BihariMajdoor #Bihar #Biharpolice #CMOT #TamilNadu #DGPSylendrababuIPS #TNPolice pic.twitter.com/NIUPdXMU6C
— Tamil Nadu Police (@tnpoliceoffl) March 8, 2023
இதனை தொடர்ந்து தமிழகக் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் இந்த காணொளியைப் பதிவிட்டு உள்ளது. அந்த வீடியோவில் தனியார் ஹோட்டலில்
தமிழ் நாட்டில் தங்கள் வாழ்வு எப்படி இருக்கிறது என்பது குறித்தும், தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளன.
இந்த வீடியோவை டிவிட்டரில் பதிவிட்ட தமிழகக் காவல்துறை யாதும் ஊரே யாவரும் என்ற கேப்ஷனையும் அத்துடன் இணைத்துள்ளது. தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.