நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக நலனை மட்டுமல்ல தமிழக மக்களின் நலனையும் முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை சௌந்தராஜன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
நிதிநிலை அறிக்கையை காரணம் காட்டி நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவர்கள் கூறுகிறார்.
Also Read : புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் சூதுபவள மணிகள் கண்டுபிடிப்பு..!!
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் தமிழக நலனை மட்டுமல்ல தமிழக மக்களின் நலனையும் அவர் புறக்கணிக்கிறார்.
மத்திய அரசு அறிவித்த நிதிநிலை அறிக்கையில் அனைத்து திட்டங்களிலும் தமிழக நலனும்,தமிழக மக்களின் நலனும் இருக்கிறது மேலும் தேவையானதை நேரில் சந்தித்து விவாதித்து பெற வேண்டுமே தவிர அரசியல் ஆதாயத்திற்காக கூட்டத்தை புறக்கணிப்பது தமிழக மக்களின் நலனை புறக்கணிப்பதாகும்.
இப்படி ஒவ்வொரு வாய்ப்பிலும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு தமிழக நலனை முதலமைச்சர் புறக்கணிக்கிறார். இவர்களின் அரசியலை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழிசை சௌந்தராஜன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.