பல வீரர்களின் இன்னுயிர் நீத்து இந்தியர்களின் வீரத்திற்கு உதாரணமாய் விளங்கும் கார்கில் வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இன்று ( ஜூலை 26) இதே நாளில் 1999 ஆம் வருடம் நமது நாட்டிற்கும் அண்டை நாடான பாகிஸ்தானிற்கும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் 1999 ஆம் வருடம் மே மாதம் தொடங்கி 26-7-1999 வரை நடைபெற்ற போரில் நமது நாடு அடைந்த மாபெரும் வெற்றியை நினைவு கூறும் வகையில் இந்நாள் வெற்றி தினமாக (vijay Diwas) அனுசரிக்கப்படுகிறது.
இப்போர் நடவடிக்கையின் பெயர் operation Vijay என்பதால் நடப்பாண்டு இப்போர் வெற்றி தினத்தின் 25 ஆவது ஆண்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் கார்கில் வெற்றி தினத்தை போற்றும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது :
வீரர்களுக்கு தேசம் தலைவணங்குகிறது
கார்கில் போரில் உயர்த்தியாகம் செய்த நமது வீரர்களுக்கு இந்த தேசம் தலைவணங்குகிறது
நாட்டிற்காக உயர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடன் பட்டிருக்கிறோம்
தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி, ஒடுக்கப்படும் என பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.