மத்திய பட்ஜெட்டின் தாக்கத்தின் எதிரொலி யாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (gold rate) சவரனுக்கு 440 அதிகரித்து 43,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை (gold rate) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அவ்வப்போது விலை குறைந்தாலுல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கிறது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் 38 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை, தற்போது 43 ஆயிரம் ரூபாயாயை தாண்டி உள்ளது. இதனை தொடர்ந்து, நேற்று தங்கத்தின் விலை சரிந்த நிலையில், இன்று காலை நிலவரத்தின் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 அதிகரித்து ரூ.42,880க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 அதிகரித்து 43, 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டு பட்ஜெட்டில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வங்கி வைப்புத் தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக உயர்வு . பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்படும்.
விவசாய கடன் இலக்குத் தொகை ரூ. 20 லட்சம் கோடி ஒதுக்கீடு. நாடு முழுவதும் புதிதாக 157 செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும். பெண்கள் வங்கிகளில் ஆண்டுக்கு ரூ. 2லட்சம் வரை வைக்கும் தொகைக்கு 7.5% வட்டி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
மேலும் இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதிக்கு சுக்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்கத்தில் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. தற்போது தங்கம் விலை சவரனுக்கு 440 அதிகரித்து 43, 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5,415 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை ஏற்றம் சாமானிய மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சிய ஏற்படுத்தி உள்ளது.